மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம், பரவை ஆகியப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் ஆசிரியர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் 33 விழுக்காடு மட்டுமே இந்த முழு ஊரடங்கு காலத்தில் வேலைக்கு வரவேண்டும் என பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு பொறுப்பு பதிவாளராக பொறுப்பேற்றுள்ள வசந்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மத்திய உயர்கல்வித்துறை கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய அனுமதி அளித்ததால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடத்துவதற்கான நடைமுறைகளை ஆய்வு செய்யவும் புதிய மாணவர் சேர்க்கை ஆகியவற்றிற்காக ஆசிரியர்கள் அலுவலர்கள், ஊழியர்கள் என அனைத்துத் துறையிலும் 33 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு சுழற்சிமுறையில் வேலைகள் கொடுக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:‘உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிக்க மத்திய அரசின் உத்தரவு வேண்டும்