தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மதுரையில் சிறுமி பாலியல் வன்புணர்வு - போக்சோவில் இளைஞர் கைது - Madurai girl rape Youth arrested in pocso

மதுரை: சிலைமான் அருகே சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

Madurai girl rape - Youth arrested in pocso
Madurai girl rape - Youth arrested in pocso

By

Published : Jun 27, 2020, 6:24 PM IST

மதுரை சிலைமான் அடுத்த சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் (22). அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும்சிறுமி ஒருவரை இவர் காதலித்து வந்தார்.

இந்த நிலையில், சிறுமியின் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிய வந்ததையடுத்து, சிறுமியின் தாய் சதீஷ் வீட்டுக்குச் சென்று, "என் மகளை இனிமேல் தொந்தரவு செய்யாதே" என்று எச்சரித்துவிட்டு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமியைக் காணவில்லை. இதையடுத்து, பெற்றோர் அலறியடித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில், சிறுமி கடந்த 25 ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் மீட்கப்பட்டார்.

அப்போது, அவரிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, “மேலக் காரிசேரியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள கண்மாய்க்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்புணர்வு செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிலைமனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details