தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச்! - Djokovic

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச்!

By

Published : May 12, 2019, 7:00 PM IST

2019ஆம் ஆண்டுக்கான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான ஜோகோவிச், ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீமை எதிர்கொண்டார்.

இதில், ஜோகோவிச் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றிபெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details