தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்! - Lufthansa job cuts

கரோனா நோய்க் கிருமியால் ஏற்பட்டுள்ள விமான போக்குவரத்தின் வீழ்ச்சியை சமாளிக்க போராடுவதால் 22,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது. செலவினங்களை சமாளிக்க மேலும் இதுபோன்ற பணியில் இழப்புகள் இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுஃப்தான்சா, Lufthansa
Lufthansa

By

Published : Jun 11, 2020, 10:53 PM IST

லண்டன்: கரோனா நோய்க் கிருமியால் ஏற்பட்டுள்ள விமான போக்குவரத்தின் வீழ்ச்சியை சமாளிக்க போராடுவதால் 22,000 ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.

செலவினங்களை சமாளிக்க மேலும் இதுபோன்ற பணியிழப்புகள் இருக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களை கொண்டதாகும் லுஃப்தான்சா விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம். அதில் பாதி ஊழியர்கள் நிறுவனத்தின் தலைமை இடமான ஜெர்மனியில் வேலை செய்கின்றனர்.

ஏப்ரல் மாதத்தில் நிறுவனமானது ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லியன் யூரோக்கள் அளவு இழப்பை சந்தித்துள்ளது. கரோனா தாக்கம் சற்று ஓய்ந்த பிறகு 100 விமானங்களை இயக்க நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக லுஃப்தான்சா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் வெளியேற்றும் 22 ஆயிரம் ஊழியர்களில் பத்தாயிரம் பேருக்கு முன்னதாகவே இது குறித்து கடிதம் எழுதியிருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details