தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நஞ்சுக்கொடி இறங்கிய கர்ப்பிணிக்கு வெற்றிகரமாக சிகிச்சை! - மேற்குவங்க பெண்ணுக்கு நஞ்சுக்கொடி இறக்கம்

கரூர்: நஞ்சுக்கொடி இறக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட 35 வயதுடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்தனர்.

மேற்கு வங்க பெண்ணுக்கு  நஞ்சுக்கொடி இறக்கம் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்த கரூர் அரசு மருத்துவர்கள்.
மேற்கு வங்க பெண்ணுக்கு நஞ்சுக்கொடி இறக்கம் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்த கரூர் அரசு மருத்துவர்கள்.

By

Published : Jun 16, 2020, 2:20 PM IST

கரூர் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அப்பெண்ணுக்கு நஞ்சுக்கொடி இறக்கம், உதிரப் போக்கைத் தொடர்ந்து, பிரசவ வலி ஏற்பட்டதால் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையில், அவருக்கு 1.280 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. அவருடைய நஞ்சுக்கொடி, கர்ப்பப்பையின் உட்சுவரிலிருந்து கர்ப்பப்பையின் வெளிசுவர் வரை பரவிய நிலையில், நஞ்சுக்கொடியை பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிறுநீர்ப்பை கர்ப்பப்பையுடன் ஒட்டிய நிலையில் இருந்தது. இந்நிலையில் மகப்பேறு துறைத் தலைவர் காயத்ரி தேவி தலைமையில் சிறப்பு மருத்துவ குழுவில் உள்ள மகப்பேறு மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து காப்பாற்றினார்கள்.

கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் சிகிச்சை வெற்றி அடைய காரணமாக இருந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டினார்.

இதையும் படிங்க: வீடியோ விவகாரம்: முன்னாள் முதலமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details