தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தற்கொலை முயற்சி... காதலி மரணம் காதலன் கவலைக்கிடம் - காதலி மரணமடைந்தார்

கடலூர்: பண்ருட்டி அருகே காதலர்கள் செய்த தற்கொலை முயற்சியில் காதலி மரணமடைந்து, காதலன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலர்கள் தற்கொலை காதலி மரணம் காதலன் கவலைக்கிடம்
காதலர்கள் தற்கொலை காதலி மரணம் காதலன் கவலைக்கிடம்

By

Published : Jun 11, 2020, 11:46 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை ரயில்வே காலனியில் வசித்துவருபவர் கணேசன். இவரது மகள் 17 வயதான கீர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). அதே தெருவைச் சேர்ந்த சுப்புராயன் என்பவரின் மகன் சந்தோஷ்குமாரும், கீர்த்தியும் காதலித்துவந்துள்ளனர்.

இந்நிலையில் காதலன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த இரண்டு பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் காதலி கீர்த்தி மரணமடைந்தார். காதலன் சந்தோஷ்குமார் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details