நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்க தனியார் பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ராசிபுரத்தை அடுத்துள்ள குச்சிகாடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து இருசக்கரவாகனம் மூலம் சொந்தஊருக்கு வந்துள்ளனர். இதனையறிந்த வருவாய்த் துறையினர் அவர்கள் ஒன்பது பேரையும் ராசிபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தியுள்ளனர்.