குஜராத் மாநிலத்திலிருந்து கொச்சி செல்வதற்காக, ரூ.47 லட்சம் மதிப்புள்ள 23 டன் சீரக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகளில் ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) கிளம்பினர். அதில் ஒரு லாரி இன்று (ஜூன் 29) பல்லடம் அடுத்த பணபாளையம் அருகே வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோதி கவிழ்ந்தது.
திருப்பூரில் சீரகம் ஏற்றி வந்த லாரி விபத்து - ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்பு! - Lorry accident in Tirupur
திருப்பூர்: குஜராத்திலிருந்து சீரகம் ஏற்றி வந்த லாரி பல்லடம் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![திருப்பூரில் சீரகம் ஏற்றி வந்த லாரி விபத்து - ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்பு! Lorry accident in Tirupur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:40:34:1593439834-tn-tpr-01-lorrytopplesaccident-vis-7204381-29062020143733-2906f-1593421653-758.jpg)
Lorry accident in Tirupur
இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் ஓட்டுநரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீரக மூட்டைகள் சாலையில், கவிழ்ந்து கிடப்பதால் சீரக மூட்டைகளுக்கு காவல் துறையினர் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.