நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோயைத் தடுக்கும்வகையில் அனைத்து கிராமங்களிலும் உள்ள மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் - MLA Radhakrishnan
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் பல்வேறு ஊராட்சிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
Livestock were vaccinated
அந்த வகையில் கோமாரி நோயைத் தடுக்கும்வகையில் தாழஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற முகாமை மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். கால்நடை மருத்துவர் தேவராஜ் நேரடியாகச் சென்று மாடுகளுக்குத் தடுப்பூசிகளைப் போட்டுவருகிறார்.
இதில் மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கன்று, பசு, எருது, எருமை ஆகியவற்றிற்கு தடுப்பூசி போடப்பட்டது. ஊராட்சியில் உள்ள 600 மாடுகளில் முதற்கட்டமாக 300 மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.