கரோனா தொற்று காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கி ஜுன் 30ஆம் தேதி வரை தளர்வுகளின்றி ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று தொடங்கி ஜுன் 30ஆம் தேதி வரை இப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளும் மூடப்பட உள்ள நிலையில், சென்னை மாவட்ட எல்லையில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று அதிக அளவில் மது விற்பனையாகி உள்ளது.