நாகையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூரைக் காற்று, இடியுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு; இருவர் படுகாயம் - Lightning strikes
நாகை: விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த நபர் மீது மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு; இருவர் படுகாயம் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி, இருவர் படுகாயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:39-tn-ngp-04-lightning-attacks-one-death-vis-7204630-09062020203623-0906f-03348-594.jpg)
இந்நிலையில் நாகையை அடுத்த பெரும்கடம்னூரில் வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பையடுத்து விவசாய பணிகளில் வயல்வெளியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண், செந்தில், முத்துசாமி ஆகியோர் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது.
இதில் அருண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செந்தில், முத்துசாமி ஆகிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், அவர்களை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.