முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல் - ராஜீவ்காந்தி கொலை வழக்கு
மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி ஆளுநருக்கு அஞ்சல்
இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால், சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அஞ்சல் நிலையத்தில் இருந்து அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.