கன்னியாகுமரியின் மிக முக்கிய ஆறான பழையாறு, அந்த மாவட்டத்தின் ஆஸ்ரமம், சுசீந்திரம், வடக்கு தாமரைகுளம், சுவாமிதோப்பு மணக்குடி காயல் ஆகிய பகுதிகளைக் கடந்து குமரியின் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு கடக்கும் தடங்களான சுசீந்திரம், வடக்கு தாமரை குளம் உள்பட பல இடங்களில் இரவு நேரத்தில் ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் மணல் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது.
இந்த மணல் கொள்ளையில் தென் தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல மணல் கடத்தல் தலைவன் ஆசைதம்பி(39) தலைமையில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த கும்பல் தொடர்பில் பல புகார்கள் வந்த நிலையில் ஆசைதம்பி குறித்து தகவல்களை ரகசியமாக காவல்துறையினர் சேகரித்தனர்.