தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நில ஆக்கிரமிப்புகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் துணை போகக் கூடாது: அமைச்சர் ஓ.எஸ். மணியன் - நாகை மாவட்ட செய்திகள்

நாகை: நில ஆக்கிரமிப்புகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் துணை போகக் கூடாது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

நாகையில் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி
நாகையில் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி

By

Published : Sep 11, 2020, 6:20 PM IST

நாகை மாவட்டத்தில் பணிபுரியும் 453 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு கோடியே 12 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று (செப்.11) செப்டம்பர் 11 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் பல சான்றிதழ்கள் பெறுவது எளிமைப் படுத்தப்பட்டு கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணினி பயன்பாட்டை முழுவதுமாக அறிந்து கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும்.

அரசுக்கு அரசு தொடர்பான பல அலுவலகங்கள் கட்டுவதற்கும் மக்கள் பல வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் நிலத் தேவை என்பது பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பல அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.

இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள், அமைச்சர்கள், ஆகியோர் துணை போகக் கூடாது. மக்களுக்கு நம்பிக்கை உரியவராக நம்பிக்கை ஏற்படுத்தும் வண்ணம் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details