பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உடல் நலக் கோளாறு காரணமாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்னது நான் மாம்பழம் சாப்பிடக் கூடாதா? அடம்பிடிக்கும் லாலு - ரிம்ஸ் மருத்துவர்கள்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடலில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரித்துள்ளதால் அவர் மாம்பழம் சாப்பிடக் கூடாது என ரிம்ஸ் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவரது உடலில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரித்துள்ளதால், அவர் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று ரிம்ஸ் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ரிம்ஸ் மருத்துவர் டி.கே.ஜா கூறுகையில், " அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் சாப்பிட அனுமதித்திருந்தோம். ஆனால் அவர் ஒரு நாளைக்கு அதிகமான மாம்பழங்களை சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடலில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரித்துள்ளது. எனவே அவர் மாம்பழம் சாப்பிடக் கூடாது நாங்கள் நிறுத்திவிட்டோம்" என்றார்.