தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

'மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்'- டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அறிக்கை - Doctors association statement

சென்னை: மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கிட பணிநியமனம் செய்திடல் வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ ஊழியர்கள் பற்றாக் குறையை போக்கிட பணிநியமனம் செய்திடல் வேண்டும் - டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
மருத்துவ ஊழியர்கள் பற்றாக் குறையை போக்கிட பணிநியமனம் செய்திடல் வேண்டும் - டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

By

Published : Jul 10, 2020, 11:01 PM IST

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில், இந்தியா முழுவதும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், ஏராளமான மருத்துவத் துறைப் பணியாளர்களும் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்நிலையில், கரோனாக் கால அவரச தேவைக்காக உடனடியாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக, எக்ஸ்-ரே ஊழியர்கள், ஈ.சி.ஜி நுட்பநர்கள், சி.டி ஸ்கேன், டயாலிசிஸ், மயக்கவியல், அவசர சேவை நுட்பநர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற மருத்துவத் துறைப் பணியாளர்களை சில தனியார் அமைப்புகள் மூலம், ‘வெளி கொணர்தல்’ முறையில் நியமிக்க 12.06.2020 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இவர்களுக்கு, நிறுத்திவைக்கப்பட்ட பணிநியமனங்களை, மருத்துவப் பணியாளர்கள், பணிநியமனத்திற்காகவே உள்ள, தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன ஆணையம் (Medical Recruitment Board) மூலம் உடனடியாகச் செய்திருக்க வேண்டும். இந்த கால தாமதத்தால் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்கைகுறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனா தடுப்புப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில், தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரியும் ஊழியர்கள் , 108 அவசர ஊர்தி ஊழியர்கள் கரோனா தொற்றுக்கு உள்ளானால் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஒப்புதலுடன் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details