சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழிலாளர்கள் நல வாரியங்களில் உறுப்பினர்களாக தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள மாவட்ட அளவிலான தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியிருந்தது.
இதனால் தொழிலாளர்களுக்கு பதிவு செய்ய செல்வதில் பல சிரமம் ஏற்பட்டுவந்தன. இந்த சிரமத்தைப் போக்கும் விதமாக தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையதளம் மூலம் https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி தொழிலாளர் துறையால் தற்போது ஏற்படுத்தப்பட்டது.
அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொண்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியினை தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் இன்று தொழிலாளர் ஆணையரகத்தில் தொடங்கி வைத்து பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை நேரில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் அ.யாஸ்மின் பேகம், தொழிலாளர் கூடுதல் ஆணையர் க. ஜெயபால், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் ஆ.திவ்யநாதன் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர் -1 பா.மாதவன் மற்றும் உதவி ஆணையர் சு.பா. சாந்தி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கான தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன.
அவை
1. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்
2. தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம்
3. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்