விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம்.வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது. பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லியம்பாளையம், கீழக்கணவாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர் மாவட்டம் வழியாக அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக சென்று கலந்தது. இந்த நீரை பெரம்பலூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1983ஆம் ஆண்டு விளாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு சீரமைக்கப்படாமல் இருந்ததால், இதனை விவசாயிகள் சீரமைக்கக் கோரிக்கை விடுத்தனர்.