தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைக்க வேண்டும்: பீலா ராஜெஷ் - பீலா ராஜேஷ்

கிருஷ்ணகிரி: தொற்றுள்ள நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களை மருத்துவமனையில் தனிமைபடுத்துதல், அவர்களை சார்ந்தவர்களை கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டு அவர்கள் வெளியில் வராத வகையில் கண்காணித்துகொள்ளவேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

By

Published : Jun 24, 2020, 4:44 AM IST

கரோனா தடுப்பு கூடுதல் சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் இன்று இரண்டாம் கட்டமாக காணொலி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், மருத்துவக்கல்லூரி முதல்வர், இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர் நலப்பணிகள், ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் பீலா ராஜேஷ் பேசுகையில், "மாவட்டத்தில் தற்போது கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டு வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தேன். கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதோடு, நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு மருத்துவ குழுக்கள் மூலமாக ஆலோசனை வழங்க வேண்டும்.

மேலும், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்களின் தொடர்பு எண்கள் கூடிய விவரங்களை உடனடியாக கிராம அளவிலான குழுக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை வீட்டில் தனிமைபடுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும். சிவப்பு மண்டலங்களில் இருந்து வருபவர்களை ஏழு நாட்கள் முகாம்களில் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

பிறகு, தொற்றுள்ள நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களை மருத்துவமனையில் தனிமைபடுத்துதல், அவர்களை சார்ந்தவர்களை கண்டறிந்து வீடுகளில் தனிமைப்படுத்தல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டு அவர்கள் வெளியில் வராத வகையில் கண்காணித்துகொள்ளவேண்டும். மேலும் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முககவசம், கிருமிநாசினி பயன்படுத்துதலை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து அலுவலகங்களின் முகப்பு பகுதியில் தண்ணீர் வசதியுடன் கை கழுவும் உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்.

கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். கிராமம்தோறும் செவிலியர்கள், சுகாதாரத் துறை களப்பணியாளர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வழங்கி அப்பகுதி மக்களுக்கு அவ்வப்போது ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்புச் செய்யவும் மாவட்ட சுகாதார துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

தேசிய நெடுஞ்சாலைகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகள் அமைக்கப்பட வேண்டும். சோதனைச் சாவடிகளில் வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடு மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கவேண்டும்" என்பது போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details