கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சாந்தி தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
கிருஷ்ணகியில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நேற்று அனைத்து அரசு அலுவலர்களும் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அலுவலர்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழியில், "இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்" என்றனர்.