தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது! - விலங்குகளை வேட்டையாடியவர் கைது

கோவை: அவுட் காய் எனப்படும் நாட்டு வெடி தயாரித்தவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Arrest
Arrest

By

Published : Sep 16, 2020, 2:24 PM IST

கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில் அவுட் காய் எனப்படும் நாட்டு வெடி குண்டுகளை கொண்டு வன விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

இது குறித்து வந்த தகவலை அடுத்து, கோவை மாவட்டத்தின் மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் மேலும் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் உத்தரவின்பேரில், வேட்டையாடும் நபர்கள் கண்காணித்தனர்.

இந்த நிலையில் இம்மாதிரியான நாட்டு குண்டு தயாரிப்பில் வெள்ளியங்காட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் ஈடுபடுகிறார் என்று தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க பெரியநாயக்கன்பாளையம், காரமடை சரகர்களுடன பணியாளர்கள் அடங்கிய தனி குழு தீவிரமாக தேடி வந்தனர்.

அந்நிலையில் சீலியூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த மூர்த்தியை பிடித்து விசாரணை செய்து, மேற்படி சீலியூரில் உள்ள அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது ஏர்கன், நாட்டு வெடி குண்டு செய்வதற்கு தேவைப்படும் வெடிமருந்து, கரி மருந்து மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் மீது மேற்படி நடவடிக்கை தொடர இவரை காவல்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர்.

கோவை வனக் கோட்டத்தில் நாட்டு வெடியால் யானை, மாடுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details