கோவை மாவட்டத்திற்கு விமானம் மூலம் வந்த காளப்பட்டியைச் சேர்ந்த 24 வயது பெண், மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக வந்த ஹோப் காலேஸ் பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கரோனா பாதித்தவருடன் தொடர்பிலிருந்த வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த 54 வயது முதியவர், காட்டூரை சேர்ந்த 66 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சரவணம்பட்டியைச் சேர்ந்த ஒருவயது ஆண் குழந்தை மற்றும் தெலுங்குபாளையத்தை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
டவுன்ஹாலை சேர்ந்த 27 வயது ஆண், கோட்டூரை சேர்ந்த 23 வயது பெண் காவலர், வடவள்ளியை சேர்ந்த 69 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 31 வயது ஆண், கரடிமடையை சேர்ந்த 35 வயது ஆண் உள்ளிட்டோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 நாள்களில் 168 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கோவையில் கரோனா பாதிப்பு 300ஐ கடந்துள்ளது.
இதனிடையே, கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பட்டுத்துணி கடையில் 100க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளி இன்றி துணிகள் வாங்கியதால், அந்தக் கடைக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.