தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலருக்கு கரோனா - kovai latest News

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

kovai Collector office Corona Positive Case
kovai Collector office Corona Positive Case

By

Published : Jun 1, 2020, 8:37 PM IST

கோவை மாவட்டத்தில் வைரஸ் தொற்று 29 நாள்களுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டது. சென்னை, மும்பையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் முதல் தளத்தில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலக பெண் அலுவலர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல் தளம் மூடப்பட்டது.

இவர் சென்னையிலிருந்து நான்கு நாள்களுக்கு முன்பு சாலை வழியாக கோவை வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் முதல் தளத்தில் இயங்கும் நுகர்வோர் குறைதீர் மன்றம், நில அளவை பண்டக அறை, மாவட்ட ஊராட்சி அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகங்கள், மண்டல இணை இயக்குனர் புள்ளியியல் அலுவலகம், மாவட்ட சிறை நன்னடத்தை அலுவலகம், ஆதி திராவிட பழங்குடியின தனி வட்டாட்சியர் அலுவலகம், உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு அனைத்து அறைகளும் மூடப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details