காஷ்மீரின் புல்வாமாவில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பாகிஸ்தான் ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதற்காக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொறியியல் பயின்றுவரும் காஷ்மீரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கும் ஹூப்ளி நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் மாணவர்களுக்கு பிணை...!
பெங்களூரு: தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேருக்கு ஹூப்ளி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பிணை!
நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அசோக் அனவேகரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஹூப்ளி கிராமப்புற காவல்துறையினர் உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்றும், அதனால்தான் மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.