தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 9:40 PM IST

ETV Bharat / briefs

கருப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக நடவடிக்கை கோரி போராட்டம்!

கோவை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து இழிவுப்படுத்தி வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை தடை செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது.

கருப்பர் கூட்டம் காணொலியை கண்டித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்!
கருப்பர் கூட்டம் காணொலியை கண்டித்து கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்!

கருப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் இந்து மத தெய்வங்கள் குறித்து, காணொலிகள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் குறித்து அண்மையில் ஒரு காணொலி ஒன்று வெளியானது.

அந்தக் காணொலிக்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அந்த யூ ட்டியூப் சேனலுக்கு எதிராக புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மருதமலை கோவிலின் அடிவாரத்தில் உள்ள நடைப்பாதை வியாபாரிகள் அனைவரும் இணைந்து அந்த ய ட்யூப் சேனலுக்கு எதிராகவும் அந்த சேனலை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அதை பதிவிட்ட அவர்களை கைது செய்யுமாறும் கையில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று கோவை ராமநாதபுரம் கணேஷபுரம் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் அவர்களது இல்லத்தில் முருக கடவுளின் படத்தை வைத்து அதற்கு மரியாதை செலுத்தினார். கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் அவர்கள் வீட்டிலும் முருக கடவுளின் படத்தை வைத்து வழிபாடு செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details