ஈரோடு - சேலம் மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் பட்டப்பகலில் பேய் நடமாட்டம் இருப்பதாக எழுந்த வதந்தியால் காவலர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு பிற மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வரும் வாகனங்களைக் கண்காணிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைச்சாவடி அமைந்துள்ள காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியின் இரண்டு பகுதிகளிலும் மின் மயானம், இறந்தவர்களின் உடலை புதைக்கும் மயானம் உள்ளது.
இந்நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வரும் காவிரி ஆற்றின் பாலத்தைக் கடந்து கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியில் உள்ள புதைக்கும் மயானத்தின் சாலையில் இருந்து, வெள்ளை நிறத்தில் சின்னதாக உருவம் சென்று, பெரியதாக மாறி, பின்னர் சாலையில் சென்ற காரில் மறைந்த காட்சிகள் சோதனைச்சாவடியில் பொருத்தபட்டு இருந்த சிசிவிடியில் பதிவாகியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள் வெள்ளை நிறத்தில் தோன்றியது பேய் தான் என அச்சத்தில் அதிர்ச்சியில் இருந்தனர்.
இதையடுத்து, சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் இன்று (ஜூன் 16) திடீரென காது, மூக்குப் பகுதியில் இருந்து ரத்தம் வழிந்து மயங்கி விழுந்துள்ளார்.