கர்நாடக மாநிலத்தில் குடகு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கு செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு - கிருஷ்ணராஜ சாகர் அணை
தருமபுரி: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள 45 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆறு மூலம் பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைகிறது.
மேலும் கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 668 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது.
தமிழ்நாடு எல்லையான தருமபுரி மாவட்டம் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர் வரத்து தற்போது 11 ஆயிரம் கனஅடியாக உள்ளது. கர்நாடகாவிலிருந்து வெளியேற்றப்பட்ட காவிரி நீர் 45 ஆயிரம் கனஅடி நீர் இன்று மாலை அல்லது நாளை தமிழ்நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.