தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

பொதுமக்களிடம் முறைகேடாக வசூல்: காவலர்கள் மீது பாஜக புகார்

புதுச்சேரி: காவலர்கள், நகராட்சி ஊழியர்கள் முறைகேடாக பொதுமக்களிடம் வசூல் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.

Karaikkal BJP Party Petition To Collector
Karaikkal BJP Party Petition To Collector

By

Published : Jun 24, 2020, 6:29 PM IST

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் முகக் கவசம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

இதையடுத்து, காரைக்காலில் காவலர்களும், நகராட்சி ஊழியர்களும் ஆங்காங்கு நின்றுகொண்டு அனைவரையும் மிரட்டி வசூல் செய்து பொதுமக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்குவதாகக் கூறி, பாஜக காரைக்கால் மாவட்டச் செயலாளர் துரை சேனாதிபதி தலைமையில் அக்கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அப்போது, மாநில அரசு பொதுமக்களுக்கு இலவசமாக கிருமி நாசினி, முகக் கவசம் வழங்க வேண்டும், பொதுமக்களிடம் வசூல் வேட்டையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கால் வெறிச்சோடிய தூங்கா நகரம்!

ABOUT THE AUTHOR

...view details