தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருவாரூர் நோக்கி படையெடுத்த காரைக்கால் மதுபிரியர்கள் - கரைக்கால் மதுக்கடைகள் அடைப்பு

காரைக்கால் பகுதியில் மது கடைகள் அடைக்கப்பட்டதால் எல்லைப்பகுதியான திருவாரூர் மாவட்டத்திற்கு மதுபிரியர்கள் படையெடுத்தனர்.

Karaikal wine lovers
Karaikal wine lovers

By

Published : Apr 29, 2021, 8:38 PM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை பாதுகாத்து வருகிறது.

இந்நிலையில், காரைக்கால் பகுதியில் மது கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்து சந்தித்துள்ளனர். காரைக்கால் பகுதி திருவாரூர் மாவட்டத்திற்கு அருகில் இருப்பதால் காரைக்காலை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் திருவாரூர் அருகே சன்னாநல்லூர் கிராமத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் கரோனா பரவும் என்ற பயமின்றி காரைக்காலைச் சேர்ந்த குடிமகன்கள் முட்டிமோதி மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். எனவே அதி தீவிரமாக பரவி வரும் கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பொதுமக்கள் குடிமக்கள் போன்றோர் தாங்களாகவே சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை , மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாடு எல்லைக்குள் மது வாங்குவதற்காக டாஸ்மாக் கடை முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details