கன்னியாகுமரி மாவட்டத்தில், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு உளவுத் துறை காவல் சிறப்புஉதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்தவர் நாகர்கோவிலைச் சேர்ந்த சுரேஷ்குமார் (48).
இவர், உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் காரோனா தொற்று கண்டறியப்பட்டதன் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.