தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஒடிசாவில் மேலும் ஒரு மாவேயிஸ்ட் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர்

புவனேஸ்வர்: ஒடிசாவின் காந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு மாவோயிஸ்ட் சுட்டு கொல்லப்பட்டார்.

ஒடிசாவில் மேலும் ஒரு மாவேயிஸ்ட் சுட்டுக்கொலை

By

Published : Jul 7, 2020, 7:22 PM IST

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காந்தமால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீக் சிங், ’ஒடிசா மாநிலம் துமுடிபந்தா காவல் எல்லைக்குட்பட்ட சிர்லா வனப்பகுதியில், திங்கள்கிழமை மாலை இந்த என்கவுன்ட்டர் நடந்தது. மாவட்ட தன்னார்வ படை மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் கூட்டுக் குழு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது, மாவோயிஸ்ட்கள் கூட்டுக் குழுவினர் மீது கையெறி குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், சில காவல் துறையினர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் பன்சாதரா-நாகாவளி-குமுசார் பிரிவின் உறுப்பினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தப்பி ஓடிய மாவோயிஸ்ட்களை கண்காணிக்கும் பணி பாதுகாப்புப் படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காந்தமாலின் ஃபிரிங்கியா பகுதியில் பாதுகாப்பு படையினரால் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன"என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details