தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கரோனா குறித்து இணைய வகுப்புகள் அறிமுகம்!

மதுரை: கரோனா தொற்று நோய் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக இணையதள வகுப்புகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன்

By

Published : Jun 7, 2020, 3:23 AM IST

இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில், “மத்திய கல்வி அமைச்சர் மூன்றாவது ஆண்டு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்செய்ய கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி ஒவ்வொரு கிராமங்களிலும் இணையதள சேவை வெகுவிரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

கரோனா நோய் தொற்று தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, உயிர் இழப்பு என்பது குறைவாக உள்ளது. மாணவர்கள் படிப்புகளை தொடர்வதற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணையவழி சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கரோனா நோய்தொற்று காலத்தில் வைரஸ் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வார சான்றிதழ் வகுப்பாக வைராலஜி, எபிடெமியோலஜி மற்றும் இனபெக்ஷஸ் டிசீஸ் மூன்று தலைப்புகளில் சான்றிதழ் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் படிப்பறிவு இல்லாதவர்களும் கலந்துகொண்டு வைரஸ் என்றால் என்ன நோய் தொற்று என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details