தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

7 நாளில் 'தேவர்மகன்' ஸ்கிரிப்டை எழுதிமுடித்த கமல்ஹாசன்! - Latest cinema news

நடிகர் கமல்ஹாசன் 'தேவர் மகன்' படத்தின் திரைக்கதையை ஏழு நாள்களில் எழுதி முடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

தேவர் மகன்
தேவர் மகன்

By

Published : Jun 13, 2020, 4:30 PM IST

நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் நேற்று மாலை 'தலைவன் இருக்கிறான்' என்ற நேரலை கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். அதில் இருவரும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனிடம், தேவர் மகன் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "தேவர் மகன் படத்தில் இயக்குநராகப் பணிபுரிந்த நண்பர் பரதன், ஒரே வாரத்தில் படத்தின் ஸ்கிரிப்டை தரவில்லை என்றால், தான் படத்திலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறினார். அதனால் அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு ஏழு நாள்களில் தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தேன்.

மேலும் இப்போது, யாராவது என்னிடம் பெட்டி பெட்டியாகப் பணத்தைக் கொடுத்து ஒரு வாரத்தில் ஸ்கிரிப்ட் எழுதச் சொன்னால் அது என்னால் முடியாது. ஏனென்றால் ‘தேவர் மகன்’ ஸ்கிரிப்ட்டை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, உத்வேகத்துடன் எழுதினேன்" என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன், கௌதமி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் 1992ஆம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details