தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கச்சநத்தம் வழக்கில் மீனாட்சி, முத்தையாவிற்கு ஜாமின் ரத்து! - கச்சநத்தம் மோதல் மீனாட்சி, முத்தையா

மதுரை: கச்சநத்தம் மோதல், கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனாட்சி, முத்தையா தங்களுக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கச்சநத்தம்

By

Published : Nov 22, 2019, 2:32 PM IST

கச்சநத்தம் மோதல், கொலை வழக்கு தொடர்பாக மீனாட்சி, முத்தையா இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மகேஸ்வரன் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், உயர் நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கியதற்கான உரிய காரணம் வழங்கப்படவில்லை. எனவே மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி உறுதி செய்து கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், கச்சநத்தம் மோதல் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனாட்சி, முத்தையா ஆகியோர் தங்களுக்கு ஜாமின் கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், இரண்டு பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: இறந்தவரின் உடல், பொதுப் பாதை வழியாக எடுத்துச் செல்லும் வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details