தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2020, 6:46 PM IST

ETV Bharat / briefs

சிறு பல்பொருள் வணிகர்களுடன் கைகோர்க்கும் ஜியோ மார்ட்

கரோனா பொது முடக்கத்தினால் வியாபாரம் இழந்து தவித்து வரும் சிறு பல்பொருள் அங்காடிகளை தங்களுடன் இணைத்து, அவர்களின் வருமானத்தை பெருக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் திட்டமிட்டுள்ளது.

ஜியோ மார்ட்
ஜியோ மார்ட்

டெல்லி: வியாபாரம் இழந்து தவித்து வரும் சிறு பல்பொருள் அங்காடிகளை தங்களுடன் இணைத்து, அவர்களின் வருமானத்தை பெருக்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் திட்டமிட்டுள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து சாதகங்களும் இருந்தபோதிலும், மார்ச் காலாண்டில் சிறு பல்பொருள் அங்காடிகளின் சந்தைமதிப்பு 4 விழுக்காடு வரை வீழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் சிறு வணிகர்கள், பொருள்களை விற்பனை செய்யும் முறைகளை வகுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த போக்கை சரிசெய்ய ரிலையன்ஸ் ஜியோ மார்ட் உதவும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

200 நகரங்களில் தனது சேவையைத் தொடங்கிய ஜியோமார்ட்

இதன்மூலம் இணைய தொழில்நுட்ப தளத்தின் வாயிலாக பயன்பெற முடியும். பைகளில் அடைத்த பொருள்களுக்கும், அடைக்காத பொருள்களுக்கும் விதிக்கப்படும் வரிகளில் 10 விழுக்காடு வரை வேறுபாடும் உள்ளது என்று கூறியுள்ள நிறுவனம், இது சிறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details