அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம் காவலர்களுக்கு கரோனா உறுதி: காவல் நிலையம் மூடல்! - அரியலூர் கரோனா பாதிப்பு
அரியலூர் : ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.
Police affected by Corona
இதைத் தொடர்ந்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்கள் சிகிச்சைக்காக அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.