கன்னியாகுமரியில் பிற மனித உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு மனிதாபிமானத்துடன் செயல்பட்டவர்கள் ஜீவன் ரக்க்ஷ பதக் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் ஜீவன் ரக்க்ஷ விருதுகளை வழங்கி வருகிறது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சகம், இந்திய அரசின் துறையினரிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஜீவன் ரக்க்ஷ விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்பட உள்ளன. அவைகள், “சர்வோட்டம் ஜீவன் ரக்க்ஷ பதக் என்பது மீட்பவரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் உயிரை காப்பாற்றுவதில் வெளிப்படையான தைரியம், உட்டம் ஜீவன் ரக்க் பதக் என்பது மீட்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் உயிரை காப்பாற்றுவதில் விரைந்து செயல்படுதல், ஜீவன் ரக்க்ஷ பதக் என்பது, மீட்பவரின் உயிருக்கு உடல் காயம் ஏற்பட்ட சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றுவதில் விரைந்து செயல்படுதல்” ஆகும்.
இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு காசோலை உடன் பதக்கம் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2018 அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப்பின் செய்த சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தட்டிக்கேட்டவரின் மண்டையை உடைத்த இளைஞர்கள்