மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபக் ஆகியோர் வழக்கு தொடுத்திருந்தனர்.
'எங்கள் அனுமதியின்றி ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லம் அமைக்கக் கூடாது'
சென்னை : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தை எங்கள் அனுமதியின்றி நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா, தீபக் இருவரும் நேரடி வாரிசுதாரர்கள். எனவே, அவர்களின் அனுமதியின்றி நினைவில்லம் அமைக்கக்கூடாது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லெட்சுமியை இன்று (ஜூலை 3) நேரில் சந்தித்த தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை அளித்தனர். இந்த சந்திப்பின்போது அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சுதர்சன், சுப்பிரமணி ஆகியோரும் உடனிருந்தனர்.