டெல்லி: தலைநகரின் ஒரு சின்னமான ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கை புனரமைக்க புதிய திட்டங்களை விளையாட்டு அமைச்சகம் செயல்படுத்தவுள்ளது.
தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆகும் செலவு 7,853 கோடி ரூபாய் என அரசு கணக்கிட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் பிஃபா, ஒலிம்பிக்ஸ் போன்ற பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்த இந்த மைதானமும் கருத்தில் கொள்ளப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 60ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுகளிக்கும் இருக்கை வசதியுள்ளது இந்த மைதானம். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக 1000 கோடி ரூபாய் செலவில் அப்போது புனரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.