உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முதல் போட்டி நாளை சவுத்ஹாம்டன் நகரில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்வதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்காக, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்திய வீரர் பும்ராவிடம் ஊக்கு மருந்து சோதனை செய்ப்பட்டது. நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை, ஊக்கமருந்து தடுப்பு பிரிவினர் பரிசோதனை செய்வதற்காக அழைத்துச் சென்றனர்.