தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய் விலகல்! - WorldCup

காயம் காரணமாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் இருந்து ஜேசன் ராய் விலகல்!

By

Published : Jun 17, 2019, 10:26 PM IST

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சொந்த நாட்டில் தொடர் நடைபெறுவதால், இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது.

விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.இதைத்தொடர்ந்து, நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ள போட்டியில், இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் தற்காலிகமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் இங்கிலாந்து அணியின் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

காயத்தால் அவதிப்பட்ட ஜேசன் ராய்

ஜேசன் ராய் விளையாடிய மூன்று போட்டிகளில் தலா ஒரு சதம், ஒரு அரைசதம் என 215 ரன்களை எடுத்துள்ளார். காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக சக வீரர் ஜோ ரூட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details