கைர்சைன் (உத்தரகாண்ட்):இந்திய - சீன எல்லைப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தோ- திபெத் ஹிம்வீர் படைவீரர்கள்(Indo-Tibetan Border Police -ITBP) 10 ஆயிரம் முதல் 17ஆயிரம் அடி உயரத்தில் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில், பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுவருகிறது இந்தோ - திபெத் பாதுகாப்புப் படைப் பிரிவு (Indo-Tibetan Border Police -ITBP). திங்கட்கிழமை (ஜூன் 15) இரவு கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் வைத்து, இரண்டு ராணுவத்தினரை சீனப் படையினர் தாக்கிக் கொன்றனர்.
இதனையடுத்து எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினர், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குளிர்காலம், ஆபத்தான பனிப்பாறைகள், கண்ணுக்குத் தெரியாத இயற்கை ஆபத்துகள் ஆகியவற்றுக்கு இடையே -45 டிகிரிக்குக் கீழே உள்ள வெப்பநிலையில், ஐ.டி.பி.பி ராணுவத்தினர் தங்கள் சேவை காலத்தின் பெரும்பகுதியை இங்கு செலவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை தோற்கடிக்க ஒரே வழிதான்!
சுவாசிக்க குறைந்தளவு காற்று, அதிகபட்ச உயரம், கடுமையான வானிலை ஆகிய சவால்களையும் இவ்வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஐடிபிபி-இன் ஏழாவது பட்டாலியன், லிபுலேக் எல்லையில், எல்லையை கவனித்துக்கொள்வதோடு, கைலாஷ் யாத்திரீகர்களையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.