மகாராஷ்டிரா முதல் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிவரை நிலவும் (1.5 கிலோமீட்டர் உயரம்வரை ) வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 23 முதல் 27 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.