புவி நிலப்பரப்பை கண்காணிப்பதற்காகவும், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காகவும், ரிசாட் 2 பி ஆர் 1 என்ற செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி -46 ராக்கெட் உதவியுடன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. 615 கிலோ எடை கொண்ட இச்செயற்கைக்கோள் ஐந்து ஆண்டு காலம் நிலைக்கும் தன்மைக் கொண்டது.
இமேஜிங் உணர்வி (சென்சார்) மூலம், இந்தச் செயற்கைக்கோளானது, நாட்டின் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்களின் ஊடுருவலைக் கண்டறிய, இந்த ரிசாட் 2 பி செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.