2015ஆம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் சேர சிரியாவுக்குச் சென்ற மூன்று கிழக்கு லண்டன் பள்ளி மாணவர்களில் ஷமிமா பேகமும் ஒருவர்.
குடியுரிமைக்காகப் போராடும் இங்கிலாந்து பெண்! - தேசிய பாதுகாப்பு சட்டம்
லண்டன்: ஐஎஸ் அமைப்பில் சேர நாட்டை விட்டு வெளியேறிய இங்கிலாந்து பெண் ஒருவர், தனது குடியுரிமையை மீட்டெடுப்பதற்காக போராடத் துணிந்துள்ளார்.

குடியுரிமைக்காக போராடும் இங்கிலாந்து பெண்!
இந்நிலையில், சிரியாவில் உள்ள அகதி முகாம் ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் மீண்டும் வீடு திரும்ப விரும்புகிறேன். ஆனால், முன்னாள் உள்துறைச் செயலாளர் சஜித் ஜாவிட் தனது குடியுரிமையை ரத்து செய்த பின்னர், அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. தான் வம்சாவளியில் பங்களாதேஷைச் சேர்ந்தவராக இருப்பினும், நான் வேறொரு நாட்டின் குடிமகள் அல்ல. ஜாவித்தின் முடிவு என்னை நிலையற்றதாக ஆக்கிவிட்டது' என்று தெரிவித்தார்.