12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். சென்னை அணியில், கேதர் ஜாதவுக்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், மும்பை அணியில், மிட்சல் மெக்லனகனுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. முன்னதாக, இவ்விரு அணிகளும் இறுதியாக 2015இல்தான் தகுதிச் சுற்றுப் போட்டியில் மோதியது. அதில், சென்னை அணியே வெற்றிபெற்றது, இதனால், இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெறும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.