சர்வதேச யோகா தினம் ஆண்டு தோறும் ஜுன் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பதஞ்சலி யோகா பயிற்சி மையத்தில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியோர் வரை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் யோகா தின நிகழ்ச்சி; திரளானோர் பங்கேற்பு - நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) மயிலாடுதுறையில் ஐந்து வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியோர் வரை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
international Yoga day celebration
இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். சூரிய நமஸ்காரம் தியான பயிற்சி, சித்தாசனம், சர்வாங்காசனம், சிரசாசனம், கங்காரு ஆசனம், மகா முத்ராசனம், உள்ளிட்ட யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பதஞ்சலி யோகா மைய நிறுவனர் கணேசன் யோகா பயிற்சி அளித்தார்.