கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக, பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி பயிற்சிப் போட்டியில், இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணியில் எந்த வீரரை நான்காவது வரிசையில் களமிறக்கலாம் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த கேள்விக்கு நேற்று கே.எல்.ராகுல் தனது பேட்டிங் மூலம் பதிலளித்துள்ளார். நான்காவது வரிசையில் களமிறங்கிய அவர், எந்த வித பதற்றமுமின்றி சிறப்பாக பேட்டிங் செய்தார். 99 பந்துகளில் 12 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் என 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.