இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இரண்டு டெஸ்ட் ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஹாக்கி டெஸ்ட் போட்டி இன்று பெர்த் நகரில் நடைபெற்றது.
ஹாக்கி: ஆஸி.யிடம் சரணடைந்த இந்தியா! - இந்திய ஹாக்கி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 0-4 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய அணி, அட்டாக்கிங் முறையில் ஆடியது. இதனால், 15 ஆவது நிமிடத்தில் அந்த அணியை சேர்ந்த பிளேக் கோவர்ஸ் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து, 20ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜெரிமி ஹெவார்ட் இரண்டாவது கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் இந்திய அணி ஓரளவு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை தாக்குப் பிடித்து ஆடியது. இருப்பினும் ஆட்டத்தின் இறுதிக் கட்டமான 59ஆவது நிமிடத்தில் ஜெரிமி ஹெவார்ட் கோல் அடிக்க, 60ஆவது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸ் கோல் அடித்தார். இதனால் 0-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஹாக்கி போட்டி, நாளை மறுநாள் பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.