டெல்லி:இந்தியாவில் முதல் முறையாக இயற்கை எரிவாயு வர்த்தக மையம் இன்று தொடங்கப்பட்டது.
செயல்பாட்டுக்கு வந்த இந்தியாவின் முதல் எரிவாயு வர்த்தக தளம் ஐ.ஜி.எக்ஸ் - business news in tamil
ஐ.ஜி.எக்ஸ் என்பது இந்தியாவின் முதல் தானியங்கி தேசிய அளவிலான வர்த்தகத் தளமாகும். இது ஒரு வலுவான எரிவாயுச் சந்தையை ஊக்குவிக்கவும், பராமரிக்கவும், நாட்டில் எரிவாயு வர்த்தகத்தை பெருக்கவும் செய்கிறது.
igx
இந்த மையத்தின் மூலம், இயற்கை எரிவாயு துறையில் உள்ளவர்கள் கூடி, உள்ளூர் சந்தை நிலவரம், தேவை போன்றவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
இயற்கை எரிவாயு விற்பனை, விலை தொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் வகையில், இது தொடங்கப்பட்டுள்ளது.